சென்னை:தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளார்.
ஆளுநரின் அழைப்பை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்க்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்து பேசியதாவது:
“ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஜெயலலிதாவின் கனவான மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரையில் தர்ம யுத்தம் தொடரும்” என்றார்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று புதுடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர்.