Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா

$
0
0

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொது செயலாளர் சசிகலாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது, இதன் மூலம் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செயப்பட்டார்.

இது தொடர்பாக, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் பழனிச்சாமி.

இதையடுத்து, ஆளுநர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், பழனிச்சாமி நேற்று இரவு ஆளுநரை சந்தித்து தனக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். அதன் பின்னர் காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இதனால் ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற குழப்பம் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பின் முடிவில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது, இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Edapadi Palanisamy to Sworn as TN CM at 4 PM today


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles