சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பெரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியது, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கூவத்தூரில் சசிகலா தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை ஆளும் கட்சி தலைவர் தான் முதலமைச்சராக இருப்பார் எனவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியமைக்க சசிகலா திட்டம் தீட்டியுள்ளார்.