சென்னை, மெரினா கடற்கரைக்கு அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, மெரினா கடற்கரையில் பல லட்சம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சமூக வலைதளமான, 'பேஸ் புக்'கில், 'மெரினா கடற்கரையில் மீண்டும் ஒன்று கூடுவோம் என தகவல் பரவியது'. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 28 நள்ளிரவு, 2:30 மணி முதல், பிப்., 12 நள்ளிரவு, 12:00 மணி வரை, மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.