டமாஸ்கஸ்:அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிப்புக்குள்ளான சிரியா நாட்டை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபத், தனது தாயாரின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அலாபத், "நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?, சிரியாவில் உள்ள குழந்தைகளும் தீவிரவாதி போல தெரிகின்றனரா? அவர்களைப் பற்றி நீங்கள் நினைத்துப் பாருங்கள். உங்களது நடவடிக்கை மிகவும் மோசமானது. தடையை நீக்கவில்லை என்றால், எங்களது நாட்டையாவது அமைதியாக இருக்க விடுங்கள்” என பேசியுள்ளார்.