விஜயவாடா:ஆதரவற்ற சிறுவர்கள் விடுதியில், கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த பிரவீன் என்ற சிறுவன் மீது, விடுதி காப்பாளர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தினத்தன்று நடந்த இந்த சம்பவத்தை விடுதி காப்பாளர் மூடி மறைக்கப் பார்த்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த வாக்கு மூலத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
கழிவறையை சுத்தம் செய்ய மறுத்ததால், பிரவீண் மீது ஆத்திரம் அடைந்த காப்பாளர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தீயில் கருகிய சிறுவன் தன்னைக் காப்பாற்றுமாறு கதறியும், தான் கூறுவதை செய்வதாக ஒப்புக் கொண்டால் தான் காப்பாற்றுவேன் என்று காப்பாளர் கூறியுள்ளார். மேலும் உண்மையைச் சொல்லக் கூடாது என்று காப்பாளர் ப்ரவீனையும், பிரவீனுடன் தங்கியிருக்கும் அவரது சகோதரர் அதுரி மணித்தையும் மிரட்டியுள்ளார்.
14 வயதான பிரவீன், தற்போது 70 சதவீத தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறான்.