சென்னை: ஜல்லிக்கட்டை நடத்தவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கவும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் ஐந்தாவது நாளாக போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அவசர சட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இதையடுத்து மதுரை ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடத்தப்படும் என்றும் அதை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பார் என்று அறிவித்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முழுமையான தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளனர். எங்களை அவசர சட்டம் கொண்டு வந்து ஏமாற்ற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.