சென்னை:ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்களும், பொதுமக்களும் ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று ஒப்புதல் வழங்கினார். எனவே நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை தொடங்கி வைப்பதற்காக இன்று இரவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்கிறார். இதற்காக வாடி வாசலை தூய்மை படுத்தும் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டிற்கான இந்த அவசர சட்டம் 6 மாதத்திற்கு மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.