தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இன்று பிறப்பிக்கப்படும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக இன்று காலை தமிழக அரசு வரைவு அவசர சட்டம் ஏற்றி அதை உள்துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு தொடர்பான இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என்று கூறினார். மேலும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இன்று பிறப்பிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.