Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் : உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்காது

$
0
0

சென்னை:ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என மோடி கூறியிருந்தர். அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக அவரச சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும். எனவே மாணவர்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவசர சட்டம் போதாது. ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் நிரந்தர தீர்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு, நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனவும், அதற்கு தடையும் விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியானது. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு, ஒரு வாரம் காலம் எந்த நடவடிக்கையும், அதாவது எந்த தீர்ப்பும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

No judgement to promulgate ordinace to hold jallikattu


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles