தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என புரட்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர இருப்பதாக இன்று காலை டெல்லியில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அறிவித்தார். மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக சட்ட திருத்தம் செய்து அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற பிறகே போராட்டம் முடிவுக்கு வரும் என இளைஞர்கள், மாணவர்கள் அறிவித்துள்ளனர்.