ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று ஏராளமான தொண்டர்கள் அவர் வீட்டிற்கு முன் தினமும் திரண்டு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளான இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, "இன்று முதல் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். ஜெயலலிதாவின் வழி நடந்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிப்பேன் என்றார்."
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தீபா, ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.