ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தின் தடையால் 2015-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டாவது தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசியல் கட்சிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.