சென்னை:தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. சிகிச்சையின் போது அவரை யாரும் பார்க்கவில்லை.
கவர்னர், முதல்வர், மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. பார்த்த ஒரு ஆள் சகிகலா மட்டும் தான்.
ஜெயலலிதாவுக்கு என்ன வியாதி என யாருக்கும் தெரியாது. ‘ஜூரம்’ என்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் பிறகு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
நான் ஜோசியர் அல்ல. அரசியல் கால்குலேட்டர். அரசியலை கணிப்பவன். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வராது. ஓட்டு மொத்தமாக தமிழகத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும்.
தி.மு.க.வினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். கட்சி பணிகளில் மும்முரமாக செயல்பட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.