In Pic: Mr. Prasenjit Ghosh, COO, Oliva Skin and Hair Chain of Clinics at the newly launched branch in Anna Nagar, Chennai
ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக் சென்னையில் விரிவாக்கம் செய்கிறது
தென் இந்தியாவின் முன்னணி மருத்துவவியல் அழகியல் மையம் அதன் கவிண்மிகு நிலையத்தை சென்னை அண்ணா நகருக்கு கொண்டுவந்துள்ளது
சென்னை 7 ஜனவரி 2017:- ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக் அதன் முதல் கிளினிக்கை சென்னை அண்ணாநகரில் திறந்துள்ளது. தற்பொழுது பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள நிலையில் ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக் தனது 12வது கிளினிக் மூலம் தனது கால் தடத்தை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்துள்ளது.
இந்த துவக்க விழாவில் பேசிய ஒலிவாவின் சி ஓ ஓ, பிரசெஞ்சித் கோஷ், “ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் எங்களுக்கு கிடைத்த வெற்றியனை தொடர்ந்து எங்கள் சேவையினை சென்னைக்கு கொண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கிளினிக் துவக்கத்தின் மூலம் தென் இந்தியாவின் முன்னணியில் உள்ள 3 மாநிலங்களில் எங்கள் இருப்பு விரிவடைந்துள்ளது. நாங்கள் தென் இந்தியா முழுவதும் எங்கள் சேவைகளை விரிவடைய செய்ய உள்ளோம்” என கூறினார்.
“2016 எங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டு. நாங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் 5 கிளினிக்குகள் துவங்கி அதன்மூலம் தோல் நிலைமைகள் கையாள்வது மற்றும் சன்னமான முடிகளுக்காண சிகிட்சைகளை மக்களுக்கு வழங்கி உள்ளோம். கடந்த 7 ஆண்டுகளில் 1,00,000 வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கியுள்ளோம். நாங்கள் 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 20 கிளினிக் உடன் புதிய சந்தைகளான விஜயவாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்றவற்றில் நுழைய திட்டமிட்டுள்ளோம் அதுமட்டும் இன்றி வரும் வருடங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விரிவடைய உள்ளோம்” என மேலும் அவர் கூறினார்.
சங்கிலி தொடர் கிளினிக்குகளான ஒலிவா ஸ்கின் & ஹேர் கிளினிக் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் திரும்பவும் வந்து செல்லும் கிளினிக்குகள் ஆகும். இந்த மருத்துவமனை பருக்கள், வடு, முதுமை, மந்தமான தோல், முடி உதிர்தல், ஆகிய வற்றுக்கு அழகியல் மற்றும் அழகு சிகிச்சைகள் வழங்குகிறது.
மிகவும் அங்கீகாரம் பெற்ற ஒரு குழு தலைமையில் அனுபவம் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஒப்பனை தோல்நோய் மருத்துவர்கள் மற்றும் டிரைக்காலஜிஸ்ட் அடங்கி உள்ளனர். ஒலிவா கிளினிக் யு எஸ் எப்டிஎ அங்கீகாரம் மற்றும் உலக தரத்திலான வசதிகளை கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் கஸ்மடிக் சிகிட்சைகள் வளர்ச்சியினை கண்டுள்ளன குறிப்பாக முடி உதிர்தலை தடுத்தல் மற்றும் முடி மீட்பு ஆகியவற்றிலும் அவைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதே செய்தியாக இருந்தன. இதற்க்கு முன்னர் மக்கள் முடி மற்றும் தோல் பிரட்சனைகளுக்கு வீட்டு முறை வைத்தியங்களை செய்துவந்தனர் இப்போது மருத்துவவியல் அழகியல் சிகிச்சைகள் வளர்ச்சியை கண்டுள்ளன. விழிப்புணர்வின் காரணமாக இந்த சிகிட்சைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.