பாங்காக்:தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த காவ் யாய் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா வந்த முரியல் பெனுடுலியர் (41) என்ற பிரெஞ்சுப் பெண் பூங்காவில் உள்ள முதலையுடன் செல்பி எடுக்க முயற்சித்தார். செல்பி எடுக்க முயற்சித்த போது முதலை இருந்த ஓடையில் முரியல் தவறிவிழ, முதலை அவரது காலைக் கடித்து விட்டது.
கடும் முயற்சிக்குப் பின் காப்பாற்றப்பட்ட அந்த பெண்ணுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து காலில் கட்டுப்போட்டுள்ளனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பயத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.