Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஏ.டி.எம் களில் இனி ரூ.4,500 எடுக்கலாம்

$
0
0

புதுடெல்லி: கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு நவம்பர் 8–ந்தேதி அறிவித்தது.

இதனால் மக்களிடையே கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் நாளை (01-01-2017) முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று இரவு அறிவித்தது. எனினும் ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ. 24,000 வரை மட்டுமே எடுக்க முடியும்.

மேலும் ஏ.டி.எம்.மில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

From tomorrow Rs 4500 can be withdrawn from ATM


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles