Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ராகுல் காந்திக்கு சுப்ரமணியசாமி எச்சரிக்கை

$
0
0

புது டெல்லி:பழைய ரூ. 1000, 500 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பிரதமர் மோடிக்கு முக்கிய பங்குண்டு. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என நேற்று முன்தினம் (டிசம்பர் 14) காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுலின் குற்றச்சாட்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க எம்.பி., சுப்ரமணியசாமி, "பிரதமருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டிற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறும் ராகுல், சட்ட விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அந்த ஆதாரங்களை போலீசிலோ அல்லது கோர்ட்டிலோ ஒப்படைக்க வேண்டும். அப்படி அவர் ஆதாரங்களை ஒப்படைக்காவிட்டால், பிரதமர் மீது அவதூறாக குற்றம்சாட்டியதற்காக ராகுலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்" என சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

BJP MP Subramaniya Siva warns Rahul Gandhi


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles