பெங்களூர்:பெங்களூர் இல்யாஸ் நகரை சேர்ந்தவர் அருண் பாஷா. தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த அவர் அதே பள்ளியில் படிக்கும் 16 வயதான 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் அவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதனையடுத்து அந்த மாணவியை பள்ளிக்கு வெளியே சந்தித்த ஆசிரியர் அருண் பாஷா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பின்னர் மாணவியை அடிக்கடி பள்ளிக்கு வெளியே சந்தித்து வினாத்தாள்களை வழங்கி மாணவியிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார் அருண் பாஷா.
இந்நிலையில் ஒருநாள் மாணவியை தனியார் ஹோட்டலுக்கு ஆசிரியர் அருண் பாஷா அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்த பின்னர் மாணவிக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரை கொடுத்துள்ளார்.
பின்னர் மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற அவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அருண் பாஷாவை கைது செய்துள்ளனர்.