இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது உடலுக்கு பொருந்தக்கூடிய வகையில் சிறுநீரகம் கிடைத்ததால் இன்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.