Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கவுதமியின் குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம்

$
0
0

சென்னை: ஜெயலலிதாவின் திடீர் மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ரகசியம் ஏன் வெளியிடப்படவில்லை? அவரை எதற்காக தனிமைப்படுத்தினார்கள்? அவரை கவனிக்கும் உரிமை யாருக்கு அளிக்கப்பட்டது? இதுபற்றிய அனைத்து விவரங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

கவுதமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நிருபரிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்தது அப்பல்லோ டாக்டர்கள் மட்டுமல்ல, உலகப்புகழ் பெற்ற லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து சிகிச்சை அளித்துள்ளார்கள்.

மருத்துவராக இருக்கிற ஒருவர் ஒரு நோயாளியின் குணம் அறிந்து சிகிச்சை அளிக்க கடமைப்பட்டுள்ளார். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கவுதமி கேள்வி கேட்கிறார். யாரையும் பார்ப்பதற்கு முதலில் ‘அம்மா’ அனுமதிக்க வேண்டும். இதை கவுதமி புரிந்து கொள்ள வேண்டும்.

அம்மா உடல்நிலை 4-ந்தேதி சீர்கெட்ட பிறகு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே தனது டுவிட்டரில் விரிவாக எழுதி இருந்தார். அம்மாவுக்கு இப்படி ஒரு திடீர் ‘கார்டியாக் அரஸ்ட்’ வரும் என கருதவில்லை என்று தெளிவுபட கூறி இருக்கிறார். கோடிக்கணக்கான மக்களின் அன்பையும், அபிமானத்தை பெற்ற நீங்கள், நாங்கள் அளித்த சிகிச்சையில் குணமாகி வீடு திரும்புவீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை வீண் போனதால் எனக்கே பெரிய வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்

நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்.

இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADMK party shows protest against Gauthamis suspecion towards Jayalalithaas death


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles