புதுடெல்லி:டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததில் எந்த பலனும் இல்லை. இதுவரை ஒரு பைசா கூட கருப்பு பணம் வரவில்லை.
50 நாட்கள் பொருத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை 1 மாதம் முடிந்துவிட்டது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மிகப்பெரிய தோல்வியாகும். இதில் ஊழல் தான் நடந்துள்ளது. ரூபாய் நோட்டு மாற்றிய பணம் வராக்கடனுக்குதான் போய் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.