சென்னை:ஜெயலலிதா அவர்கள் இந்த ஆண்டு மே மாதம் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிந்து சுமார் 6 மாதங்களே ஆன நிலையில் ஜெயலலிதா மரணம் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் காலியாகி உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மே மாதம் அங்கு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் சிலர், அந்த தொகுதியில் சசிகலாவை போட்டியிட வைத்து எம்.எல்.ஏ. ஆக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நேற்று போயஸ்கார்டனில் சசிகலாவை அ.தி.மு.க. மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்போது இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பெறும் நிலையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாகவும் மாறினால் ஒட்டு மொத்த அதிகாரமும் அவரிடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.