புதுடெல்லி:தென்மேற்கு வங்ககடலில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை "நாடா" புயலாக மாறியது. அது திடீர் என்று வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறி இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி சென்னை, கடலூரில் பெய்த மழையில் பெரும் சேதம் உருவானது.
இதனால் "நடா" புயல் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது திடீர் என்று வலுவிழந்து கரையை கடந்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்ககடலில் அந்தமானுக்கு தெற்கே வருகிற 4-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடையுமா என்பதை வானிலை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.