திருச்சி: திருச்சி- சேலம் சாலையில் உள்ள முருங்கப்பட்டி கிராமத்தையொட்டி வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை 7.30 மணியளவில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, திடீரென வெடி மருந்து குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. குடோனுக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் நெடுந்தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டனர்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, தொழிலாளர்கள் ஆங்காங்கே உடல் சிதறிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 20 தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.