Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

$
0
0

சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த விவகாரத்தில் நாள்தோறும் புதுப் புது அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்பி வரும் மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களின் சிரமங்களை தீர்க்க கோரியும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் ஏராள மானோர் பங்கேற்றனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, சுப்பு லட்சுமி ஜெகதீசன், வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

DMK leader Stalin led protest againt Demonitisation move


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles