Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கறுப்பு பணத்தை மாற்ற உதவினால் அபராதம்

$
0
0

புதுடில்லி: கறுப்பு பணத்தை மாற்ற உதவி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது. இந்த பணத்தை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

ரூ.2.50 லட்சம் வரை டெபாசிட் செய்தால் அபராதம் கிடையாது எனவும், ஜன்தன் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கறுப்பு பணம் பதுக்கியவர்கள் சிலர், தங்களது பணத்தை வேறொருவரின் வங்கியில் செலுத்தி வெள்ளையாக மாற்றுவதாக புகார் எழுந்தது. இதற்காக வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு பணம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் வேறொருவரின் பணத்தை செலுத்தினால், அது வருமான வரி விசாரணையில் வரும். இதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். தங்களது வங்கிக்கணக்கை தவறாக பயன்படுத்த மற்ற நபர்களை அனுமதிப்பவர்கள் மீது வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கறுப்பு பணத்தை மாற்ற உதவி செய்யக்கூடாது. தவறான வழியில் கறுப்பை வெள்ளையாக மாற்றும் குற்றச்செயல்களில் மக்கள் யாரும் ஈடுபட வேண்டாம். கறுப்பை ஒழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்கள் அனைவரும் உதவி செய்யாவிட்டால், இந்த திட்டம்வெற்றி பெறாது. இது போன்று தவறான வழிகளில் ஈடுபட முயற்சிக்கும் நபர்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை பறிமுதல் செய்வார்கள்.

கறுப்பு பணம் மனித நேயத்திற்கு எதிரானது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

The people who are helping exchange of black money will also be punished


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles