Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

மீண்டும் மீண்டும் பணம் எடுக்க தடை

$
0
0

புதுடெல்லி:மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள், புதிய ரூபாய் நோட்டுகளை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை பல்வேறு நபர்களிடம் கொடுத்து, அனுப்பி வங்கிகளில் கொடுத்து கருப்புப் பணத்தை மாற்றுகிறார்கள். இதன் மூலம் பல்வேறு நபர்கள் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர்கள் தங்களது கருப்புப் பணத்தை முதலீடு செய்யும் இந்த நடவடிக்கை தடுக்கப்படும். இதற்காக இனி பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும். இதனால் ஒரே நபர் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து சட்ட விரோதமாக பணம் பெறுவது தடுக்கப்படும்.

பல்வேறு நபர்கள்தான் மீண்டும் மீண்டும் வருவதால் தான் நாடெங்கும் வங்கிகளில் நீண்ட கூட்டம் கூடுகிறது. இனி அது தவிர்க்கப்படும்.

ஒருவர் பணம் மாற்றும் போது அந்த கவுன்டரிலேயே கை விரலில் அடையாள மை வைக்கப்படும். தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு மை வைப்பது போல இந்த மை வைக்கப்படும்.

கை விரலில் அடையாள மை வைப்பது பெரு நகரங்களில் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. மற்ற பகுதிகளில் நாளை முதல் இது அமல்படுத்தப்படும்.

கை விரலில் அடையாள மை வைப்பதால் இனி வங்கிகளில் நெரிசல் குறையும். புதியவர்கள் வந்து மிக எளிதாக தங்களிடம் உள்ள பழைய பணத்தை மாற்றி செல்ல முடியும்.

வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பழைய ரூபாய் நோட்டுகளை உடனுக்குடன் அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்த பழைய பணத்தை சேகரிக்க சிறப்பு தனிப்படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு தேவையான பணம் உள்ளது. கூட்டுறவு வங்கிகள், தபால் நிலையங்களில் கூடுதல் பணத்தை கை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பணத்தை மாற்றும் வி‌ஷயத்தில் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதி அடையவோ தேவை இல்லை. பொறுமையாக புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறலாம்.

இவ்வாறு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

Finger print identification ink used while currency changers


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles