சென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் கட்டப்பட்டிருந்த 11 மாடி கட்டிடம் இன்று மாலை வெடி வைத்து தரைமட்டமாக்கப்பட்டது. கடந்த 2014 ஆண்டு ஜூன் 28ம் தேதி மாலை சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 61 பேர் உயிரிழந்தனர். இதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டிடமும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது, இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
இதன்படி, அந்த கட்டிடத்தின் தூண்களில் துளையிடப்பட்டு 75 கிலோ அளவிற்கு வெடி பொருட்கள் நிரப்பப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான முறையில் தரைமட்டமாக்கப்பட்டது.