இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரத்தை குறிவைத்து நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஹவுத்தி இனப்போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுத்தி இனப் போராளிகளால் வீசப்பட்ட அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்து நிறுத்தியதோடு, அதனை தாக்கி அழித்துள்ளது.