சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில், விசாகப்பட்டினத்திற்கு அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளது. புயல் வலுவிழந்ததை தொடர்ந்து, புயல் எச்சரிக்கை திரும்ப பெற்றுக்கொள்ளப்படுகிறது.
இருப்பினும் கியான்ட் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதனால் நாளை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 30ம் தேதி முதல், வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழ்நிலை உள்ளது என்றார்.