இலங்கையில் 2 தமிழ் மாணவர்கள் போலீசாரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில்-குளப்பிட்டி சந்தியில் விபத்து ஒன்றில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் விபத்து நடந்த போது துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அங்கு திரண்ட மாணவர்கள் இறந்த 2 மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை நடத்த வலியுறுத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த மாணவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை கைது செய்துள்ளதாகவும் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.