Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஜெயலலிதாவிடம் எனக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்கள்: கருணாநிதி

$
0
0

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்துள்ளார் அதில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த விடைகள் வருமாறு

கேள்வி:- தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை எப்படிக் கணிக்கிறீர்கள்?.

பதில்:- தம்பி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கட்சியினரையும், கட்சியையும் அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு, மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக உள்ளது.

கேள்வி:- ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற பேச்சும், எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?.

பதில்:- ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க.வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.

கேள்வி:- தி.மு.க.வில் மு.க.அழகிரி இல்லாததை ஓர் இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா?.

பதில்:- இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, தி.மு.க.வில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்துக்கு தடையாகிவிடும்.

கேள்வி:- ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?

பதில்:- நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.

கேள்வி:-ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?

பதில்:-பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanidhi speaks likes and dislikes of CM Jayalalithaa


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles