புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே ஆவி வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. சிலவற்றை பார்க்கும் போதே அது பொய்யாக ஜோடித்தது என்று நமக்கு தெரிந்து விடும். ஆனால், சில வீடியோக்கள் நிஜத்திற்கு அருகில் இருப்பது போல் தெரியும். அதுபோல் டில்லியில் உள்ள சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு ஆவி உருவம் தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
டில்லியில் உள்ள ஒரு சாலையில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கருப்பு உறுவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் ஒரு லாரி, அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது. அதன்பின் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை அந்த உருவத்தின் மீது மோதி கடந்து செல்கிறது.
ஆனாலும், எதுவும் ஆகாமல் நடந்து செல்லும் அந்த உருவம் சட்டென மறைந்து விடுகிறது. அந்த சிசிடிவி வீடியோவில் தேதி 15.08.2016 என்று காட்டுகிறது.