தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கவனித்து வந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா தொடர்ந்து நீடிப்பார் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நல குறைவு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில காலம் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆலோசனைப் படி அவர் கவனித்து வந்த உள்துறை உள்ளிட்ட அனைத்து இலாக்காக்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் என்று செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். மேலும் அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெறும் வரையில் இந்த நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.