Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மென்ட் படிப்பு

$
0
0

Rajib Kumar Hoto (Commissioner of Income Tax inaugurated the Victus International Acadmey of Hospitality and Management. Dr. Shyamala Mourouvapin (Provost- The Victus), M.S. IllanKumaran – International Director ICGE and C. Sridharan (Vice Chairman) are also seen.

'வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மென்ட் படிப்பு': வெக்டஸ் அகாடமி அறிமுகம்

சென்னையில் வெக்டஸ் சர்வதேச விருந்தோம்பல் மற்றும் மேலாண்மை அகாடமி தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் செயின்ட் கிளேர் காலேஜ் ஆப் கனடா நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட நான்கு வருட ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மென்ட் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

ராஜிப் குமார் ஹோடா, வருமான வரி ஆணையர், சுமித் சரண், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோர் நிறுவனத்தை தொடங்கி வைத்தனர். நம்பி, இணை இயக்குனர், புலனாய்வு பிரிவு, கே.டி ஸ்ரீனிவாச ராஜா, மேலாண்மை இயக்குனர், அடையார் ஆனந்த பவன், ஆர். ராமச்சந்திரன், தலைவர் சக்தி குரூப் நிறுவனம், ஆகியோர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஐ.சி.ஜி.ஈ சர்வதேச இயக்குனர் இளங்குமரன், துணை தலைவர் ஸ்ரீதரன், வெக்டஸ் அகாடமி அதிகாரி டாக்டர் ஷ்யாமளா, பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் "மேம்பட்ட நான்கு வருட ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மென்ட் படிப்பை வெக்ட்ஸ் சர்வதேச விருந்தோம்பல் மற்றும் மேலாண்மை அகாடமி இன்று அறிமுக படுத்தியது.

சென்னை ஈக்காடுதாங்கள் பயிற்சி மையத்தில் வட அமெரிக்காவில் தேர்ச்சி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் முதல் செமஸ்டர் கற்பிக்க படும். அடுத்த செமெஸ்டர்களை கனடாவில் படிக்கலாம்.

இரண்டு இடங்களில் படிப்பதால் மாணவர்களுக்கு செலவு குறையும், கை தேர்ந்த நிபுணர்களால் திறன் பயிற்சி கிடைக்கும். மாணவர்களுக்கு சிறந்த முறையில் விருந்தோம்பல் மற்றும் மேலாண்மை துறையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு கல்வியை அளிக்க வெக்டஸ் சர்வதேச நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அமெரிக்கா மிச்சிகனில் உள்ள திறன் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் விருந்தோம்பல் மேலாண்மை திறன் பயிற்சி பெறலாம்.

இந்த படிப்பின் சிறப்பு என்னவென்றால் உள்நாட்டில் முதல் செமெஸ்டருக்கு பிறகு செயின்ட் கிளேர் காலேஜ் ஆப் கனடாவில் படிக்கலாம். டிஸ்னி வேர்ல்ட் மற்றும் பிளோரிடாவில் 6 மாதங்கள் தொழில் சார்ந்த பயிற்சி பெறலாம். மத்திய மிச்சிகன் பல்கலைக்கழக நிபுணர்களால் பயிற்சி அளிக்க படும். மாணவர்களுக்கு தகுதியை வளர்த்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் தொழில் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் இந்த நிறுவனம் நடத்த படுகிறது. இங்குள்ள உள்கட்டமைப்பு சர்வதேச தரம் வாய்ந்தது. சென்னை மையம் ஓம் சக்தி குரூப் ஆர்.ஆர். கல்வி சேவை நிறுவனத்தால் நிர்வகிக்க படுகிறது ஓம் சக்தி குரூப் பல்வேறு ஸ்டார் ஹோட்டல்களை கொண்டுள்ளது. வெக்ட்ஸ் சர்வதேச விருந்தோம்பல் மற்றும் மேலாண்மை அகாடமி மேலும் பல மையங்களை திருநெல்வேலி, மதுரை, கோவை மற்றும் இலங்கையிலும் துவக்க பட உள்ளது.

ரான் செகுயின், சர்வதேச துணைத்தலைவர், நாதனில் வெல்ட் கேம்ப், மேலாளர், சர்வதேச திட்டங்கள், ரூத் சூசன்னா, சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்டார்.

Hospitality Management program


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles