(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு)
புதிய தலைமுறை தொலைக்காட்சியில், வாரந்தோறும், திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை 5.30 மணிக்கு, உங்கள் ஊர்... உங்கள் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மீண்டும் ஒளிப்பரப்பாகத் தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில், ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் விதமாக, அவர்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலான செய்திகள், சமூக அவலங்கள் இடம்பெறுகின்றன.
மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாள்தோறும் நடைபெறும் எண்ணற்ற நிகழ்வுகளில் முக்கியமானவற்றை தொகுத்து, அதுகுறித்தான செய்திகளும், உங்கள் ஊர்... உங்கள் குரல் பகுதியில் விவரிக்கப்படுகிறது. இவை தவிர, தமிழக அளவில் நாள்தோறும் நிகழும் சில சுவரஸ்யமான செய்திகளும், உங்கள் ஊர்.. உங்கள் குரல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
வழக்கமான செய்திகளின் பார்வையிலிருந்து சற்று மாறுபட்டு, கிராமங்கள், சிற்றூர்கள், சிறிய நகரங்களில் நடைபெறும் முக்கிய செய்திகளும், அங்குள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அதன் உண்மை தன்மை மாறாமல், உண்மை உடனுக்குடன் என்ற வகையில், செய்தித் தொகுப்புகளாக இடம்பெறுகின்றன.
ஏழை-எளிய, அடித்தட்டு மக்களின் குரலாகவும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களது பிரச்னைகளையும் உரத்தும் சொல்லும் நிகழ்ச்சியாக, செய்தித்தொகுப்பாக, திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை 5.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் உங்கள் ஊர்.. உங்கள் குரல் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.