இ - வ: மருத்துவர் திரு. அமல் ஏ. லூயிஸ், மருத்துவர் திரு கே. பி. சுரேஷ்குமார், முன்னாள் காவல்துறை இயக்குனர் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். நடராஜ், மருத்துவர் திரு, அரவிந்த் செல்வராஜ் மற்றும் மருத்துவர் திரு. எஸ். மனோஜ், காவேரி மருத்துவமனை.
காவேரி மருத்துவமனையின் அதிநவீன ஆஞ்சியோபிளாஸ்டி மையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். நடராஜ் துவக்கி வைத்தார்
உலக இருதய தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி இருதய நோயை குணப்படுத்தவல்ல அதிநவீன ஆஞ்சியோபிளாஸ்டி மையத்தை முன்னாள் காவல்துறை இயக்குனர் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். நடராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.
திரு. அரவிந்த் செல்வராஜ், மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குனர், இருதய மருத்துவ நிபுணர்கள் திரு கே. பி. சுரேஷ்குமார், திரு. அமல் ஏ. லூயிஸ் மற்றும் திரு. எஸ். மனோஜ், காவேரி மருத்துவமனை, ஆகியோர் உடனிருந்தனர்.
திரு. நடராஜ் அவர்கள் கூறியதாவது: இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா மற்றும் உடற்பயிற்சியை நம் மக்கள் தொடர்ந்து செய்யயவேண்டும். வருடமொருமுறையாவது இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கான பரிசோதனைகளை செய்துகொள்ளுதல் அவசியம். மிகவும் தீவிரமான இருதய கோளாறு மற்றும் மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்களுக்காக இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இருதய அறுவை சிகிச்சையை முற்றிலும் தவிர்த்து நவீன ஸ்டென்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் காவேரி மருத்துவமனையின் இந்தச்சிறப்புப் பிரிவு பாராட்டுக்குறியது.
ஏனென்றால், இருதய அறுவை சிகிச்சை முடிந்து பல நாட்கள் நோயாளி மருத்துவமனையில் தங்குவது என்பது முந்தைய நிலை. இந்நிலையை மாற்றி இரண்டு மூன்று நாட்களிலேயே நோயாளி முழு குணமடைந்து நலமாக வீடு திரும்பும் வண்ணம் இந்தப் புதிய நவீனமுறை வழிவகை செய்துள்ளது. உலகளவில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு இருதய நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர் என்கிறது ஒரு அறிக்கை. இந்நிலை மாறி, இதுபோன்ற புதிய அதே சமயத்தில் நம்பகமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருதய நோயற்ற நாடக இந்தியா திகழ வேண்டுமென்பதே நம் விருப்பம்.