புதுடெல்லி:அரியானா மாநிலத்தில் பள்ளி மாணவியை மானபங்கம் செய்தது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடு மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ரத்தோர், தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது. கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரத்தோர் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜரானார்.
இந்நிலையில் ரத்தோரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, ரத்தோர் குற்றவாளிதான் என கீழ்கோர்ட் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். அதேசமயம், அவரது தண்டனைக் காலத்தை குறைத்தனர். அதாவது, அவர் ஏற்கனவே அனுபவித்த தண்டனைக் காலத்தையே தண்டனையாக வழங்கி தீர்ப்பளித்தனர்.