முழு உத்வேகத்தோடு தொடங்கும் செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்
விளையாட்டுத்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கை-பொழுதுபோக்குத்துறையினர் மத்தியில் உற்சாகத்தையும், நேர்மறையான உணர்வுகளையும் உருவாக்கியிருக்கும் தி செலிபிரிட்டி பேட்மின்டன் லீக், சென்னையில் செப்டம்பர் 17-ம் தேதி சனிக்கிழமையன்று சீசன் 1 நிகழ்வின் அதிகாரபூர்வ தொடக்கவிழாவை நடத்துவதற்கு தயாராக இருக்கிறது.
இந்த மாபெரும் நிகழ்வு தொடங்கப்படும் நாள் நெருங்கியிருப்பதால் 'கோலிவுட், சாண்டல்வுட், மாலிவுட் மற்றும் டோலியுட்' என்ற நான்கு தென்மாநிலங்களின் திரைப்படதுறையினரின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கிற இந்த லீக் உத்வேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
"தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மத்தியில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னை ராக்கர்ஸ், கர்நாடகா ஆல்ப்ஸ், கேரளா ராயல்ஸ் மற்றும் டோலிவுட் தண்டர்ஸ் என்ற பிரான்சைஸ் பார்ட்னர்களும் மற்றும் சிபிஎல் நிர்வாகமும் இணைந்து முன்பு திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணையில் இரு சிறு மாற்றங்களை செய்வதற்கு முடிவு செய்திருக்கின்றன. அவை கீழ்வருமாறு:
1. செப்டம்பர் 17ம் தேதியன்று நடைபெற இருக்கின்ற தொடக்கவிழாவில் காணொளி காட்சி (AV Format) வழியாக கர்நாடகா ஆல்ப்ஸ் குழுவினர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
2. சென்னை லீக் மற்றும் பெங்களுரு லீக் போட்டிகள் நிகழ்வு (செப்டம்பர் 18ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்த) அக்டோபர் மாதத்தில் வேறொரு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதில் பங்கேற்கும் நான்கு குழுக்களும் முன்பே திட்டமிடப்பட்டவாறு 2016 செப்டம்பர் 24 அன்று கொச்சியில் பிராந்திய விளையாட்டு மைய அரங்கில் (RSC) இப்போது பேட்மின்டன் போட்டிகளை தொடங்குவார்கள். மலேசியா உட்பட விளையாட்டு போட்டிகளுக்கான திட்டமிடப்பட்ட பிறநிகழ்வுகள் அப்படியே நீடிக்கின்றன.
பிற குழுக்களைப் போலவே கர்நாடகா ஆல்ப்ஸ் அணியும் சிபிஎல் சீசன்-1-ன் ஒருங்கிணைந்த அங்கமாக திகழ்கிறது. இவ்விளையாட்டை அதற்குரிய சரியான உணர்வோடு விளையாடுவதற்கு அனைத்து குழுக்களும் உறுதிபூண்டிருக்கின்றன. அமைதி மற்றும் ஒத்திசைவை உறுதி செய்வதற்காக ஒரு பொறுப்புள்ள அமைப்பாக இம்முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்" என்று செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் பிரைவேட் லிமிடெட்-ன் இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான திரு. ஹேமச்சந்திரன் L தெரிவித்தார்.