லிமா:பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.1 ரிக்டர் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மொயாம்பமா நகரின் வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 114 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் மையப்புள்ளி மழைக்காடுகள் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தகவல் வெளியாகி உள்ளது.