ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவிகளுக்கு, இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல் மந்திரி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மெகபூபா முப்தி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இரண்டு மகளிர் கல்லூரிகளில் பயிலும் 300 மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டியை மெகபூபா வழங்கினார்.
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவிகள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.