சென்னையில் பெப்பர்பிரை ஸ்டூடியோ திறப்பு
சென்னை, ஆக 8: இந்தியாவில் முன்னணி பர்னீச்சர் மற்றும் வீட்டுத்தேவைக்கான சந்தையாக திகழும் பெப்பர்பிரைடாட் காம் தனது 9வது பெப்பர்பிரை ஸ்டூடியோவை சென்னை நுங்கம்பாக்கத்தில் திறந்துள்ளது. சென்னையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கான அனுபவ மையமாகஇது திகழும். இங்கு பல்வேறு வடிவமைப்புகளை அறிந்து கொள்வதோடு உள்ளரங்க வடிவமைப்பு நிபுணர்களின் இலவச ஆலோசனையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
2100 சதுர அடி கொண்ட பெப்பர்பிரை ஸ்டூடியோவில் பெப்பர்பிரையின் ஆன்லைன் பிரிவில் இடம் பெற்றுள்ள பர்னீச்சர் வகைகளை நேரில் காணமுடியும். இந்த ஸ்டூடியோ உள் அரங்கம் மற்றும் கட்டிக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையிலான வடிவமைப்புகளை அறிந்துகொள்வதோடு பெப்பர்பிரையில் கிடைக்கும் பர்னீச்சர் வகைகள் எந்தவித மரத்தால் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ளமுடியும்.
அழகான வீட்டை உருவாக்க வேண்டும் என்று விரும்பும் 2 கோடி வாடிக்கையாளர்களின் விருப்பத்தை 2020க்குள் நிறைவேற்ற உதவவேண்டும் என்ற வகையில் இந்த ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளதாக பெப்பர்பிரை தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான திரு.அஷிஷ் ஷா கூறினார்.
பர்னீச்சர் குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் உள்ள வாடிக்கையாளர்களுக்கான இதுபோன்ற ஸ்டூடியோக்களை திறப்பதாக கூறிய அவர் பெப்பர்பிரையில் கிடைக்கும் பல்வேறு வகையான பர்னீச்சர்களையும் அதுகுறித்த வடிவமைப்புகளையும் அவர்கள் அறிந்து கொள்ள இது உதவும் என்றார். சென்னை எங்களுக்கு மிகமுக்கியமான சந்தை என்றும் எனவே தான் இந்த ஸ்டூடியோவை இங்கு திறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களுடனான நம்பிக்கையை பெறுவதற்காகவும் அவர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை தருவதற்காகவும் நிறுவனம் மேற்கொண்டுள்ள மற்றொரு முன்முயற்சிதான் இந்த ஸ்டூடியோ திறப்பு என்றும் அவர் கூறினார்.
ஸ்டூடியோ திறக்கப்பட்டதன் நோக்கம் குறித்து அவர் மேலும் கூறுகையில் நிறுவனத்தின் பிராண்டு வகைகளின் விற்பனை மையமாக இதுபோன்ற ஸ்டூடியோக்கள் திகழ்கின்றன என்றார். வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து உரையாட கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு என்றும் உள் அரங்கம் தொடர்பாக அவர்களுக்கு இலவசமாக உதவி செய்யவேண்டும் என்ற எங்களது இலக்கை அடையவும் அழகான வீட்டினை கட்டுவதற்கு சரியான முடிவை அவர்கள் எடுக்கவும் இதுபோன்ற ஸ்டூடியோக்கான் உதவும் என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற ஸ்டூடியோக்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். ஸ்டூடியோக்கள் அமைக்கும் திட்டத்தை மேலும் விரிவு படுத்தும் வகையில 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் முக்கியமான நகரங்களில் 20 ஸ்டூடியோக்கள் நிறுவப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.