சென்னை:தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் விருப்ப ஓய்வு பெற்றதையடுத்து அப்பொறுப்பு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுள்ள நிலையில், இவர் வகித்து வந்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பதவிக்கும் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக பதவி வகித்து வரும் எஸ்.ஜார்ஜ், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள சு.அருணாச்சலம், தமிழ்நாடு போக்குவரத்து கழக லிமிடெட் (திருநெல்வேலி) லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆணையராக ஜார்ஜ் உடனடியாக பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே இரண்டு முறை சென்னை கமிஷனராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.