மும்பையில் இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் பேசிய அவர் பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' கனவை நிறைவேற்றும் விதமாக இந்த ரிலையன்ஸ் ஜியோ சேவையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய அம்சங்களாக அவர் கூறியது,
* மொபைல் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது
* ரோமிங்க் கட்டணம் ரத்து
* 4ஜி இணையத்தில் 1 ஜிபி பயன்பாட்டுக்கு ரூ. 50 கட்டணம் அல்லது 1 எம்பி 5 பைசா
* மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்
* டிசம்பர் 31, 2016 வரை அனைவருக்கும் இலவச ரிலையன்ஸ் ஜியோ சேவை
ரிலைய்ன்ஸ் ஜியோ செப்டம்பர் 5-ம் தேதி முதல் சந்தைக்கு வரும் என முகேஷ் அம்பானி அறிவித்தார்.