வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை மெக்சிகோ அதிபரை நாளை சந்தித்து பேச உள்ளார். இதற்கான அழைப்பை மெக்சிகோ அதிபர் என்ரிக்கோ பினா நியேடோ விடுத்து இருந்தார். இந்த அழைப்பை ஏற்றுள்ளதாக டொனால்ட் டிர்மப் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகளை ’கிரிமினல்கள்’ என்றும் 'பாலியல் குற்றம் புரிபவர்கள்' எனவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் மிகப்பெரிய தடுப்புச்சுவர் ஒன்றை கட்டப் போவதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது