ஐதராபாத்:பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அவ்வகையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 சதுர யார்டு வீட்டு மனையும், குரூப்-1 நிலையில் அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கவும், ஆந்திராவில் பேட்மிண்டன் அகாடமி தொடங்க விரும்பினால் நிலம் ஒதுக்கி கொடுக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Image may be NSFW.
Clik here to view.