ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த பாதுகாப்பு ஸ்மார்ட் கை வளையத்துக்கு டி.சி.எஸ்.விருது
ஆபத்து நேரத்தில் பெண்களுக்கு உதவும் பாதுகாப்பு ஸ்மார்ட் கைவளையத்தைக் கண்டுபிடித்துள்ள ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு டாடா கன்சல்டன்சி நிறுவனம் விருது வழங்கியுள்ளது.
ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புக்கு விருது, பரிசு வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட ஆபத்தான சமயங்களில் பெண்களுக்கு உதவும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்மார்ட் கை வளையம் கண்டுபிடிப்பு சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.
ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மின்னணு தகவல் தொடர்புத்துறைத் தலைவர் சுதா, பேராசிரியர் சுரேஷ் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் பி.ஜெகதீஷ்குமார், சி.தீபிகா, பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த வளையத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடித்த பாதுகாப்பு ஸ்மார்ட் கை வளையம் படைப்புக்கு ரூ20 ஆயிரம் ரொக்கப்பரிசு, விருதுகள் வழங்கி, டாடா கன்சல்டன்சி நிறுவன தலைமை மேலாளர் விதுகுமார் உத்துக்குரி பேசியபோது, நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டு இருக்கும் கொடுமை, அநீதிக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்கள் உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது' என்றார்.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/TCS-felicitates-students-of-Easwari-Engineering-College-19-08-16]