மும்பை: சிறுநீரகங்களை திருடி மோசடி செய்தததாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி உட்பட 5 டாக்டர்களை கடந்த வாரம் நள்ளிரவில் மும்பை போலீஸ் கைது செய்தது.
கைது செய்தவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் சட்டவிரோத சிறுநீரக மாற்று உட்பட பல மோசடிகள் அம்பலமாகின.
கைதான மருத்துவர்களில் வீனா ஸ்வேலிக்கர், சுவின் ஷெட்டி இருவரும் உள்ளூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தனர், மனுவை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர்கள் இருவரின் ஜாமின் மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், கைதான 5 டாக்டர்களும் இன்று மும்பையில் உள்ள டின்டோஷி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி காஜா பரூக் அஹமது உத்தரவிட்டார், இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.