இம்பால்:மணிப்பூரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஐரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் முடித்துக் கொண்டார். மணிப்பூர் மாநிலத்தின் முதல் அமைச்சர் ஆவதே தனது விருப்பம் என்று அவர் கூறினார்.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாலும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தங்கியிருக்கிறார் ஷர்மிளா, இந்நிலையில் தனது எதிர்கால திட்டம் குறித்து பேசிய அவர், ‘அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளேன். என்னுடைய இந்த புதிய பயணத்தை மக்கள் ஒருவேளை புறக்கணித்து விட்டால் அல்லது இழிவுப்படுத்தி விட்டால், அதன் பிறகு தனிப்பட்ட வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குவேன்’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.